Sunday, March 31, 2013

சிறகின் சொல்லைக் கேளாயோ !!


பறவையாய் சில நாட்கள் வாழ்ந்துதான் பார்ப்போமே
இயற்கையோடு இணைந்துவாழும் மகத்துவத்தை உணர்வோமே

இலைகளுடன் பினைந்தே இனிமையாய் இருப்போமே
பூக்களுடன் சேர்ந்து வண்ணங்கள் வரைவோமே

விடியலுக்குமுன் விழிக்கும் விழிகளைப் பெறுவோமே
வார்த்தையில்லா மொழியினிலே பாடல்கள் இசைப்போமே

வற்றாத நதியினிலே உல்லாசமாய் குளிப்போமே
செருக்கில்லா அமைதியின் ஆனந்தத்தில் இழைவோமே

கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மீண்டும் செல்வோமே
சுற்றம் சூழ ஒற்றுமையாய் நட்பு பாராட்டுவோமே

நம் வீட்டை நமக்காக நாமே உருவாக்குவோமே
நம் இரையை நாமேத்தேடி பசியாற்றிக்கொள்வோமே

வாகனங்கள் தேவையில்லை இடம்மாறிச் செல்வோமே
ஆபரணங்கள் வேண்டியதில்லை ஆசைதான் துறப்போமே

சின்னக்கொஞ்சல் பாஷைகளில் மனிதருடன் பேசுவோமே
நம் சிங்கார அசைவுகளில் பிறர் மனதைப் பறிப்போமே

சுதந்திரமாய் வாழ்வதிலே உள்ள சுந்தரங்கள் அறிவோமே
தன்னம்பிக்கையாய் வாழ பாடங்கள் பயில்வோமே

சிறிதுணவு கிடைத்தாலும் பகிர்ந்துண்டு மகிழ்வோமே
பிற குடும்ப வாரிசையும் நாம் பேணி வளர்ப்போமே

பூஞ்சிட்டுப் பறவையாய் மலர்த்தேனை ருசிப்போமே
வாய்வழியே சிசுக்கூட்டும் அன்பினிலே திளைப்போமே

மேகத்தின் நடுவினிலே இன்பமாய் பறப்போமே
மேலுலகின் ரகசியத்தை அறிந்துதான் வருவோமே

மழைக்கால மென்சாரலில் சிறகடித்துச் சிலிர்ப்போமே
வானிலிருந்து புவியழகை அங்கங்காய் ரசிப்போமே

மரக்கிளையின் ஊஞ்சலிலே உல்லாசமாய் ஆடுவோமே
சாது விலங்கினங்கள், மரக்கிளைகள் நம் விளையாட்டுக்கூடமே

நமக்கிடையில் பகையில்லையே பரவசமாய் வாழ்வோமே
மதமில்லை, ஜாதியில்லை என பறைசாற்றிச் சொல்வோமே

ஆம்..
வாருங்கள்..
பறவையாய் சில காலம் வாழ்ந்துதான் பார்ப்போமே
பகையில்லா உலகத்திலே இறைவனையே காண்போமே



Monday, March 11, 2013

காதல் !


காதல்..
சுகமான வலி !
கசப்பான தேன் !

அதனால் 
தினம் தினம் மரணம்!
தினம் தினம் னனம்!

காதல் வந்தால் பசி மறந்துபோகும் !
கனவே வாழ்வாகும்!

ஆயிரம் நட்சத்திரங்கள் சுற்றி இருந்தாலும்
தான் மட்டும் தனித்துவிடப்பட்டதாய் உணருவாள் நிலா!

பாலைவனத்ததில் நீரைக்கண்டதுபோல் 
துள்ளித் துள்ளி குதிக்கும் அவளின் மனம்!

உன் கைதொலைபேசி எப்பொழுதும் சினுங்குவதாய்
உனக்குள்ளே பிரம்மை தோன்றும்!

தலையணை தோழியாகும்!
கண்ணாடி கவிதை பேசும்!

இரவு உரைந்துபோகும்!
உறக்கம் இறந்து போகும்!

உன் பெயர் நினைவிழந்து
உன்னவர் பெயர் மந்திரமாகும்!

கண்ணீர் அனுமதி கேட்காது!
புன்னகை தனிமையென பார்க்காது!

உன் சித்தம் தொலைத்து, பித்தம் நிறைந்து
நித்தம் கரைவாய் ! மொத்தம் தொலைவாய்! 

நான் என்பது நான் அல்ல
நீ என்பது நீ அல்ல
என உண்மை உணர்ந்து நாமில் கரைவாய்! ஊணில் உறைவாய்!
வாழ்வின் அர்த்தம் விளங்கப்பெறுவாய்!

ஆம்.
காதல்..
சுகமான வலி!
கசப்பான தேன் !

பெண்!

பெண்! 
குழந்தையாய் இருக்கும்பொழுது எல்லா குழந்தைக்குமே பெண் குரல்தான்.. 
அதனால்தான் எல்லா மழலையுமே தேனாய் இனிக்கிறது.. 

பெண்! 
குழந்தையாய் தொட்டிலில் துயிலும்பொழுது 
தாயை  நினைவுப்படுத்துவாள்.. 
தோளிலே தூங்கும்பொழுது 
பாசத்தை கற்றுக்கொடுப்பாள்.. 
தோழியாய் நெருங்கும்பொழுது 
நம்பிக்கையை நெஞ்சில் விதைப்பாள்.. 
காதலாய் கனியும்பொழுது 
வாழ்க்கையில் அர்த்தம் கொடுப்பாள்.. 
மனைவியாய் படறும்பொழுது 
மெழுகாய் உருகி வெளிச்சம் ஏற்றுவாள்.. 
தாய்மையில் நிரம்பும்பொழுது 
தெய்வத்தை புவியில் காண்பிப்பாள்.. 
தங்கையாய், அத்தையாய், மகளாய், மருமகளாய்... 
ஒவ்வொரு வீட்டிலும் பெண்.. 
இந்த உலகத்தின் கண்..